சென்னையை அடுத்துள்ள காட்டுப்பள்ளியில் இருக்கும் துறைமுகத்தின் 97 சதவிகித பங்குகளை அதானி குழுமம் வாங்கியுள்ளது. இதனால், இனி காட்டுப்பள்ளி துறைமுகம் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் எனத் தெரிகிறது. இது குறித்து, அதானி குழுமத்தின் ஒரு அங்கமான அதானி போர்ட்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் லார்சன் அண்டு டூப்ரோ மற்றும் எம்.ஐ.டி.பி.எல் நிறுவனங்களிடம் இருந்த காட்டுப்பள்ளி துறைமுகத்தின் 97 சதவிகித பங்குகளை வாங்கியுள்ளோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காட்டுப்பள்ளி துறைமுக பங்குகளை வாங்கியதற்கு தமிழ்நாடு அரசாங்கம் மற்றும் வர்த்தக அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அந்த குழுமம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து, "தென்னிந்தியாவில், காட்டுப்பள்ளி துறைமுகத்தை, மிகப் பெரிய துறைமுகமாக மாற்ற நாங்கள் உறுதி பூண்டுள்ளோம். அடுத்த மூன்று ஆண்டுகளில் துறைமுகம் விரிவாக்கம் செய்யப்படும். 40 மில்லியன் மெட்ரிக் டன் அளவை கையாளும் அளவுக்கு இந்த விரிவாக்கம் இருக்கும்என்று அதானி போர்ட்ஸின் சிஇஓ கரண் அதானி கூறியுள்ளார். இந்திய அளவில் துறைமுகம் கட்டுதலில் முன்னணியில் அதானி போர்ட்ஸ் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
காட்டுப்பள்ளி துறைமுகத்தை கையகப்படுத்தியது அதானி குழுமம்.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment