மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்ச்சி காடுவெட்டி யில் நடைபெற்றது. இதில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர், ஊர் பொதுமக்கள் உள்பட ஏராளமா னோர் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினர். - Agnipuratchi

மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் ஜெ.குருவின் நினைவேந்தல் மற்றும் படத் திறப்பு நிகழ்ச்சி காடுவெட்டி யில் நடைபெற்றது. இதில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர், ஊர் பொதுமக்கள் உள்பட ஏராளமா னோர் கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.

Share This

வன்னியர் சங்கத் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான மாவீ ரன் ஜெ.குரு, உடல்நலக் குறைவு காரணமாக கடந்த மாதம் 25 ஆம் தேதி கால மானார். மாவீரன் ஜெ.குருவின் நினைவேந்தல் நிகழ்ச்சி அவரது சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் இன்று நெகிழ்ச்சியுடன் நடைபெற்றது. பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கட்சித் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் நடுவண் அமைச்சர்கள் அரங்க.வேலு, ஏ.கே. மூர்த்தி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், மாவீரன் ஜெ.குருவின் நினைவிடத்தில் கண்ணீர் மல்க மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

காடுவெட்டி கிராம மக்கள், பா.ம.க. தொண்டர்கள், பல்வேறு அமைப்புகளின் நிர் வாகிகள் உள்பட பெருந்திரளானோர் பங்கேற்புடன் நினைவேந்தல் நிகழ்ச்சி தொடங்கியது.முதல் நிகழ்வாக மாவீரன் குருவின் நினைவைப் போற்றும் வகை யில் கவிஞர் ஜெயபாஸ்கரன் எழுதிய பாடலுக்கு நாட்டுப்புறப் பாடகர் புஷ்பவனம் குப்புசாமி இசையமைத்து பாடிய ஒலிப்பேழை வெளியிடப்பட்டது. 

இதைத்தொடர்ந்து மாவீரன் குருவைப் பற்றிய பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாசின் உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் எழுதப்பட்ட  கவிதையை கவிஞர் ஜெயபாஸ்கரன் வாசித்தார். அதன்பிறகு, மாவீரன் ஜெ.குரு உருவப்படத்தை திறந்துவைத்து மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மலர் அஞ்சலி செலுத்தினர்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.தன்ராஜ், மாநில பொதுச்செயலாளர் வடிவேல் ராவணன், பொரு ளாளர் கவிஞர் திலகபாமா, அரியலூர் மாவட்டச் செயலாளர் வைத்தி, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் செந்தில் குமார், சொத்து பாதுகாப்பு குழு தலைவர் ஆர்.கோவிந்தசாமி, தேர்தல் பணிக்குழு தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில துணைத் தலைவர் பொங்கலூர் மணிகண்டன், அமைப்புச் செயலாளர் பேராசிரியர் செல்வக்குமார், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் மு.கிருஷ்ணசாமி, பா.ஜ.க மாநில துணை தலைவர் அரசகுமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். மாவீரன் ஜெ.குருவின் மகன் கனலரசன் உட்பட குடும்பத்தினர், வன்னியர் சங்க நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

மாவீரன் ஜெ.குரு பிறந்த காடுவெட்டி கிராமத்தில் அவருக்கு மணிமண்டபம் கட் டப்படும் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்தார்.

காடுவெட்டியில் நடைபெற்ற மாவீரன் ஜெ.குரு நினைவேந்தல் நிகழ்ச்சியில், அவருக்கு புகழஞ்சலி செலுத்திய மருத்துவர் ராமதாஸ், குருவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து விளக்கம் அளித்தார். ஜெ.குருவுக்கு உரிய சிகிச்சை அளிக் கப்படவில்லை என சில விஷமிகள் பொய் பரப்புரை மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டிய அவர், அப்பல்லோ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். மாவீரன் ஜெ.குருவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் எந்தக் குறையும் இல்லை என்றும் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விளக்க மளித் தார்.

சிங்கப்பூர் சென்று அங்குள்ள மருத்துவர்களிடன் இரண்டாவது கருத்து கேட்டு அதன்படி அங்கே சிகிச்சை எடுத்து வரலாம் என்று தானும் அன்புமணி ராமதாசும் பலமுறை வலியுறுத்திக் கூறிய போதும், குரு அதை ஏற்றுக் கொள்ளவில்லை என்று மருத்துவர் ராமதாஸ் வேதனையுடன் தெரிவித்தார். மாவீரன்ஜெ.குரு பிறந்த காடுவெட்டி கிராமத்தில் அவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இதேபோல, வன்னியர் அறக்கட்டளை சார்பில் அமையவுள்ள சட்டக்கல்லூரி வளாகத்தில் ஜெ.குரு நடந்து வருவதைப் போன்ற சிலை செப்டம்பர் 17ஆம் தேதி திறக்கப்படும் என மருத்துவர் ராமதாஸ் கூறினார். 

ஜெ.குருவுக்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பு கொடுத்த போதும், தன்னைப் பிரிய எப்படி மனம் வந்தது என்று கேட்டு அவர் கண் கலங்கிய அவர் பேச முடியாமல் நா தழு தழுக்க ‘மாவீரா’ , மாவீரா  என்று கூறியவாறே கண்ணீர் சிந்தினார். 

ஜெ.குருவுக்கு தலைவர்கள் அஞ்சலி

மாவீரன் ஜெ.குருவின் கனவை நனவாக்க பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத் தினர்  அனைவரும் உறுதியேற்க வேண்டும் என அவரது படத்திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். 

மறைந்த மாவீரன் குருவின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய பல் வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் நிர்வாகிகள்¢ குருவின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவரது வீரமும் விவேகமும் வியந்து பாராட்டத் தக்கவை என்று பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி புகழாரம் சூட்டினார். குருவின் புகழை நிலை நாட்டும் அனைத்துப் பணிகளையும் மருத்துவர் ராமதாசும், அன்புமணி ராமதாசும் மேற்கொண்டு வருகிறார்கள் என்றும் ஜி.கே.மணி கூறினார். 

மாவீரன் குரு விட்டுச் சென்ற பணிகளை முழுமையாக நிறைவேற்ற அவரது தொண்டர்கள் அயராது பாடுபட வேண்டும் என்று நிகழ்ச்சியில் பங்கேற்று உரை யாற்றிய தலைவர்கள் கேட்டுக் கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages