சிவகங்கை மாவட்டம் கச்சநத்தம் கிராமத்தில் கடந்த வாரம் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் படுகொலை செய்யப்பட்டனர். படுகாயமடைந்த 7 பேர் மருத்துவமனைகளில்¢ சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கச்சநத்தம் கிராமத்திற்கு சென்ற பா.ம.க பொருளாளர் கவிஞர் திலகபாமா, உயிரிழந்தவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய அவர், குறைகளையும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர் களிடம் பேசிய அவர், பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தவுடன் காவல்துறை பாதுகாப்பு கொடுத்திருந்தால் கொலைகள் நிகழாமல் தடுத்திருக்கலாம் என்று கூறினார்.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். அதேநேரத்தில், கொலைவெறித் தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என பாதிக்கப் பட்டவர்கள் தெரிவித்தனர்.
வழக்கு விசாரணையை மாநில குற்றப் புலனாய்வுத்துறைக்கு மாற்ற வேண்டும் என வலியுத்திய அவர்கள், இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு மற்றும் அரசு வேலை வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
No comments:
Post a Comment