மாவீரன் ஜெ.குரு படத்திறப்பு நிகழ்ச்சி மருத்துவர் இராமதாசு அய்யா திறந்து வைக்கிறார்!!. - Agnipuratchi

மாவீரன் ஜெ.குரு படத்திறப்பு நிகழ்ச்சி மருத்துவர் இராமதாசு அய்யா திறந்து வைக்கிறார்!!.

Share This

பாட்டாளி மக்கள் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், வன்னியர் சங்கத் தலைவருமான மாவீரன் குரு அவர்கள் கடந்த மே 25-ஆம் தேதி காலமானார். பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த 30 ஆம் தேதி புதுச்சேரியில் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து மாவீரன் குரு அவர்களின் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி 15.06.2018 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்கு குரு அவர்களின் சொந்த ஊரான காடுவெட்டி கிராமத்தில் நடைபெறுகிறது.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்ச்சிக்கு பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையேற்று மாவீரன் குரு அவர்களின் திருவுருவப் படத்தை திறந்து வைக்கிறார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் இந்த நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்து உரையாற்றுவார்கள். இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகள், மாவீரன் குரு அவர்களின் குடும்ப உறுப்பினர்கள், சொந்தங்கள், ஊர்ப்பொதுமக்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்கின்றனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages