திருப்பூர் அருகே பழவஞ்சி பாளையத்தில் மதுக்கடை ஒன்று நேற்று திறக்கப்பட்டது. இதை சற்றும் எதிர்பாராத அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மதுக்கடையை மூட வலியுறுத்தி அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
சாலை மறியலால் அங்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மதுக்கடையை மூட நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்ததை அடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
No comments:
Post a Comment