பிரான்ஸ் அரசு எடுத்துவரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளால் அந்நாட்டில் புகை பிடிப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதில் பிரான்ஸ் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. வெண்சுருட்டுகளுக்கு அதிக வரி விதிப்பு, புகையிலைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வை பொதுமக்களிடையே வலிமையுடன் கொண்டு செல்லுதல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் பயனாக கடந்த ஆண்டில் மட்டும் 10 லட்சம் பேர் புகைப் பிடிக்கும் பழக்கத்தை அடியோடு கைவிட்டுள்ளனர். புகையிலைப் பொருட் களுக்கு அடிமையானவர்களில் கணிசமானோர் அதிலிருந்து விடுபட விரும்புவ தாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும் புகையிலைப் பொருட்கள் பயன் பாட்டால் பிரான்சில் ஆண்டுதோறும் சராசரியாக 73 ஆயிரம் பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment