விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். - Agnipuratchi

விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் பிரதமர் மோடிக்கு அக்கறை இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

Share This

பயிர்க்காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய பிரதேசம் மான்டசூர் நகரில் கடந்த ஆண்டு விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அப்போது காவல்துறை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். இதன் முதலாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ராகுல்காந்தி சென்றிருந்தார். அங்கு  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர்,  காங்கிஸ் ஆட்சிக்கு வந்தால், பத்தே நாட்களில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

தொழிலதிபர்களுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் தள்ளுபடி செய்யும் பிரதமர் மோடி, விவசாயிகளுக்காக எதையுமே செய்யவில்லை என அவர் குற்றம்சாட்டினார். உரிமைக்காக போராடும் விவசாயிகள் குறித்து பிரதமரும் பாஜகவும் கவலைப்படுவது  இல்லை எனவும் ராகுல்காந்தி சாடினார். நீரவ் மோடி போன்றவர்களுக்கே பிரதமர் மோடி நெருக்கமனவராக உள்ளார் என அவர் கடுமையாக  கடுமையாக சாடினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages