ஸ்டெர்லைட் ஆலையில் தற்போது பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதாகவும், பணி முடிந்து ஓரிரு மாதங்களில் மீண்டும் ஆலை இயங்கத் தொடங்கும் என அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி ராம்நாத் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி யில் அசாதரண சூழல் நிலவுவதால், அமைதி திரும்பியபின் ஸ்டெர்லைட் ஆலை செயல்படும் என அவர் கூறியுள்ளார். தூத்துக்குடி வன்முறைக்கு சமூக விரோதி களும், தொண்டு நிறுவனங்களும்தான் காரணம் என்றும் ராம்நாத் குற்றம் சாட்டியுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடிமுத்திரையிட்ட நிலை யில், மீண்டும் திறக்கப்படும் என நிர்வாகம் கூறியிருப்பது தூத்துக்குடி மக்க ளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 7 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், மேலும் 5 பேரின் உடல்கள் நேற்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. துப்பாக்கிச்சூடு குறித்து கடந்த ஐந்து நாட்களாக தேசிய மனித உரிமை ஆணையக்குழு நடத்தி வந்த விசாரணை இன்றுடன் நிறைவடைகிறது. போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள், காவலர் கள் மற்றும் அதிகாரிகளிடம் ஆணையக்குழு விசாரணை நடத்தியுள்ளது.
No comments:
Post a Comment