தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் காவல்துறை யினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதுதொடர்பாக மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள் ளது. மாநில மனித உரிமைகள் ஆணையத் தலைவர் ஜெயச்சந்திரன் மற்றும் அவரது குழுவினர் இன்று தூத்துக்குடியில் கள ஆய்வு நடத்தி வருகின்றனர். வன்முறை நடைபெற்ற இடங்கள், பாதிக்கப்பட்டோரின் குடியிருப்புகள், மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்கப்படும் பகுதி ஆகியவற்றை பார்வையிட்ட அவர் கள், பொது மக்களிடம் கருத்துக் கேட்கவும் திட்டமிட்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூடு குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள் நாளை தூத்துக்குடி வரவுள்ளனர். இதே போல, தமிழக அரசு அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் வரும் திங்கட்கிழமை தனது விசாரணையை தொடங்குகிறது. துப்பாக்கிச்சூடு நிகழ்வு குறித்து பொது மக்கள் தங்களுக்கு தெரிந்த தகவல்களை வரும் 22ஆம் தேதிக்குள் நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ கொடுக்கலாம் என விசாரணை ஆணையத் தலைவர் அருணா ஜெகதீசன் அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment