காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தை டெல்லியில் அடுத்த வாரம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. - Agnipuratchi

காவிரி மேலாண்மை ஆணையத்தின் முதல் கூட்டத்தை டெல்லியில் அடுத்த வாரம் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Share This

உச்சநீதிமன்ற ஆணைப்படி காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற் றுக்குழு அமைக்கப்படும் என அறிவித்துள்ள நடுவண் அரசு, அதற்கான அறிவிக் கையை அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதன்படி காவிரி மேலாண்மை ஆணை யத்தில் தலைவர் உள்பட ஒன்பது உறுப்பினர்கள் இடம்பெறவுள்ளனர். இதேபோல காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர உறுப்பினர் ஒருவர், ஒழுங்காற்றுக் குழுவின் தலைவராக இருப்பார். தமிழகம் உள்பட 4 மாநிலங்களின் தலா ஒரு பிரதிநிதி உள்பட 7 பேர் உறுப்பினர்களாகவும், காவிரி மேலாண்மை ஆணையத் தின் செயலாளர், ஒழுங்காற்று குழுவின் உறுப்பினர் செயலாளராகவும் இருப்பார். ஒழுங்காற்றுக் குழுவின் தலைமையகம் பெங்களூரில் அமைக்கப்படும் என அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான கூட்டம் டெல்லியில் அடுத்த வாரம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதையொட்டி நடுவண் அரசுக்கு தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் காவிரி மேலாண்மை ஆணையத்துக்கான தமிழக பிரதிநிதியாக பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகரை அறிவிக்குமாறு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஒழுங்காற்றுக் குழுவிற்கான தமிழக பிரதிநிதியாக நீர்வளத்துறை தலைமைப் பொறியாளர் செந்தில் குமார் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages