'ஏழைப் பங்காளன்' ரஜினிக்கு கைத்தட்டுங்க! என்றும்... 'காவிரி இன்று அல்லது நாளை வருமாம்...! விவசாயிகள் தயாராகவும்...!' என்றும்... ரஜினி,கமல் பற்றி் கடுமையாக விமர்சனம் செய்யும் மருத்துவர் ராமதாஸ்: - Agnipuratchi

'ஏழைப் பங்காளன்' ரஜினிக்கு கைத்தட்டுங்க! என்றும்... 'காவிரி இன்று அல்லது நாளை வருமாம்...! விவசாயிகள் தயாராகவும்...!' என்றும்... ரஜினி,கமல் பற்றி் கடுமையாக விமர்சனம் செய்யும் மருத்துவர் ராமதாஸ்:

Share This
 வழக்கமான டிக்கெட் விலையைவிட ‘காலா’ டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நானா படேகர், ஈஸ்வரி ராவ், ஹுமா குரேஷி, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வருகிற 7-ம் தேதி உலகம் முழுக்க இந்தப் படம் ரிலீசாகும் இந்த படத்தை தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது, லைகா புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமாக வெளியிடுகிறது. 
இந்த படத்தை ரஜினிகாந்த பிறந்த சொந்த ஊரிலேயே ரிலீஸ் செய்ய தடை விதிக்கப்பட்டது. தமிழகத்திலும் காலா படத்திற்கு பெரும் எதிர்ப்பு இருந்துவருகிறது. இதற்கு முக்கிய காரணம் தூத்துக்குடியில் போராடியவர்களை சமூக விரோதிகள் என்று கூறியது. அவர் தூத்துக்குடி போராட்டத்தில் காயமடைந்தவர்களை நேரில் சென்று பார்த்தபோது "நீங்கள் யார்" என கேட்ட பொதுமக்களிடையே அசிங்கப்பட்டு வந்தார்.
படம் வெளியாக இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில், கூடுதல் விலைக்கு ‘காலா’ டிக்கெட் விற்கப்படுவதாக பாட்டாளி மக்கள் நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
வழக்கமான அதிகபட்சக் கட்டணம் 165.78 ரூபாய்க்குப் பதிலாக, 207.24 ரூபாய்க்கு விற்கப்படுகிறதாம். இதில் கொடுமை என்னவென்றால், ‘காலா’ திரைப்படத்தில் ஏழைப் பங்காளனாக நடிக்கிறாராம் ரஜினிகாந்த். ஏழைப் பங்காளன்... ஏழைப் பங்காளன்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் . “ஜோரா கைதட்டுங்க... என கூறியுள்ளார்.
ஜோரா கைத்தட்டுங்க 1!
காலா திரைப்படத்திற்கு முன்பதிவு தொடங்கியது. வழக்கமான அதிகபட்சக் கட்டணம் ரூ.165.78க்கு பதிலாக ரூ.207.24க்கு விற்கப்படுகிறதாம். இதில் கொடுமை என்னவென்றால் காலா திரைப்படத்தில் ஏழைப் பங்காளனாக நடிக்கிறாராம் ரஜினிகாந்த். ஏழைப் பங்காளன்... ஏழைப் பங்காளன்!

மேலும் நடிகர் கமல்ஹாசன் கர்நாடக முதல்வரை சந்தித்த விஷயத்தையும் டாக்டர் ராமதாஸ் சமூகவலைத்தளத்தில் அவரது கருத்தை பதிவிட்டார். காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதலமைச்சருடன் கமலஹாசன் இன்று பேச்சு நடத்துகிறாராம். அநேகமாக நாளை அல்லது அதற்கு மறுநாள் காவிரியில் தண்ணீர் வந்து விடும் என்பதால் குறுவைப் பாசனத்திற்கு தயாராக இருக்கவும். என்று டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதற்கும் ஜோரா கைத்தட்டுங்க 2!
காவிரி பாசன விவசாயிகள் கவனத்திற்கு... காவிரி சிக்கல் குறித்து கர்நாடக முதலமைச்சருடன் கமலஹாசன் இன்று பேச்சு நடத்துகிறாராம். அநேகமாக நாளை அல்லது அதற்கு மறுநாள் காவிரியில் தண்ணீர் வந்து விடும் என்பதால் குறுவைப் பாசனத்திற்கு தயாராக இருக்கவும்!

 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages