கர்நாடகாவில் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களை சமாளிக்க காங்கிரஸ் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. - Agnipuratchi

கர்நாடகாவில் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களை சமாளிக்க காங்கிரஸ் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது.

Share This

நீண்ட இழுபறிக்குப் பின் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அமைச்சரவை நேற்று முன்நாள் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதாதளம் மற்றும் கூட்டணிக்கட்சிகளை சேர்ந்த 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். அதேநேரத்தில் சித்தராமையா தலைமையிலான முந்தைய அரசில் அமைச்சர்களாக இருந்த எம்பி பாட்டீல், தினேஷ் குண்டுராவ், ராமலிங்க ரெட்டி, நாகராஜ் உள்ளிட்ட பலருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால் கடும் அதிருப்தியில் உள்ள அவர்கள், கடந்த 2 நாட்களாக ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 

இதுகுறித்து கருத்து தெரிவித்த பாட்டீல், தனக்கு தன்மானத்தைவிட முக்கியமானது வேறு எதுவும் இல்லை என்றார். இப்பிரச்சனையை சமாளிக்க கர்நாடக காங்கிரஸ் தலைமை புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளது. அதன்படி கட்சியை சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு சுழற்சி முறையில் அமைச்சர் பதவி வழங்குவது என முடிவு செய்துள்ளது. தற்போது பொறுப்பேற்றுள்ள அமைச்சர்கள் 2 ஆண்டுகளுக்குப் பின் மாற்றப்படுவர். ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அமைச்சர்களின் செயல்பாடுகளை மதிப்பீடு செய்து அதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என கர்நாடக மாநிலத்தின் காங்கிரஸ் பொறுப்பாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages