மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை பொழிவதால் அணைகள் நிரம்பி வருகின்றன. இந்த வகையில் கேரளாவில் முல்லை பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் ஒன்றரை அடி உயர்ந்து 118 அடியாகியுள்ளது. விநாடிக்கு 730 கனஅடியாக இருந்த நீர்வரத்து,
தற்போது விநாடிக்கு 3,438 கனஅடியாக உயர்ந்துள்ளது. இதில்குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment