ரேஷன் வாங்க கைரேகை வைக்க வேண்டும். தமிழக அரசு - Agnipuratchi

ரேஷன் வாங்க கைரேகை வைக்க வேண்டும். தமிழக அரசு

Share This

தமிழக ரேஷன் கடைகளில் இனி பயோ மெட்ரிக் (கைரேகை அடையாளம்) மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.


தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பயனாளிகள் பெயரில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் வந்தன. ரேஷன் கடைகளில் சில கார்டுதாரர்கள் வாங்காமல் விட்டுவிடுகின்றனர். அந்தப் பொருட்களையும் விற்றதாக கணக்கு காட்டி வெளிமார்க்கெட்டில் அவைகளை வெளிமார்க்கெட்டில் விற்று விடுவதாக புகார்கள் தெரிவிக்கின்றன

இதை ஒட்டி ரேஷன் பொருட்கள் விற்பனையில் முறைகேடுகளை தடுக்க தமிழக அரசு பயோ மெட்ரிக் முறையை கொண்டு வர உள்ளது. அதன்படி தமிழகம் முழுதும் உள்ள 34772 ரேஷன் கடைகளில் பயோமெட்ரிக் இயந்திரங்கள் பொருத்தப்பட உள்ளன.

இதனால் ரேஷன் பொருட்கள் வாங்க விரும்பும் பயனாளிகள் நேரில் வந்து அவர்கள் கை ரேகையை பதிய வைப்பதன் மூலமே ரேஷன் பொருட்கள் கிடைக்கும் என அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages