திருவொற்றியூர் கங்கை அம்மன் நகரில் கடந்த 3 நாட்களுக்கு முன் திறக்கப்பட்ட மதுக்கடையால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவித்தனர். அங்கு மதுக்குடிப்பவர்கள் பெண்களை புகைப்படம் எடுப்பது தெரியவந்ததால் ஆத்திரமடைந்த பெண்கள், கடையை முற்றுகையிட்ட போரட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கடை மீது சிலர் கற்களை வீசி தாக்கியதால் பரபரபுப்பு ஏற்பட்டது. தகவலறிந்து வந்த காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தி முற்றுகையை கைவிடச் செய்தனர்.
No comments:
Post a Comment