ஆம்பூர் அருகே அரசுக்குத் தெரியாமல் இயங்கும் மணல் குவாரியால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம், சோமலாபுரம் பகுதியில் பாலாற்றில் மாட்டு வண்டிகள் மூலம் இரவு நேரங்களில் மணல் திருடப்படுகிறது. மணல் சரக்குந்துகளால் கிராம சாலை கள் சேதமடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றை ஒட்டியுள்ள மயானத்தையும் ஆக்கிரமித்து மணல் திருட்டு தங்கு தடையின்றி நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தும் மணல் திருட்டைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றஞ்சாட்டியுள்ள பொதுமக்கள், அதிகாரிகளின் அலட்சியத்தால் இயற்கை வளம் கொள்ளை போவதாக வேதனை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment