நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பது குறித்து முதலமைச்சர் நிதிஷ்குமார் முடிவு செய்வார் என ஐக்கிய ஜனதாதளம் கூறியுள்ளது. - Agnipuratchi

நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்களை ஒதுக்குவது என்பது குறித்து முதலமைச்சர் நிதிஷ்குமார் முடிவு செய்வார் என ஐக்கிய ஜனதாதளம் கூறியுள்ளது.

Share This

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம்- பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணி அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என பாஜக அறிவித்துள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கும் என சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பீகாரின் செல்வாக்கு மிக்க தலைவர் நிதிஷ்குமார்தான் என்றும், அவரை முன்னிறுத்தியே நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கப் போவதாகவும் ஐக்கிய ஜனதாதள கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி தியாகி கூறியுள்ளார்.  மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 25 தொகுதிகளில் ஐக்கிய ஜனதாதளம் போட்டியிடும் என்றும் எஞ்சியுள்ள 15 தொகுதிகள் மட்டுமே பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து பாஜக விரைவில் முடிவு செய்ய வேண்டும் எனவும் ஐக்கிய ஜனதாதளம் வலியுறுத்தியுள்ளது. பாஜகவிலிருந்து தெலுங்குதேசம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் வெளியேறிவிட்ட நிலையில், முக்கிய கூட்டணிக் கட்சியான ஜக்கிய ஜனதளமும் போர்க்கொடி உயர்த்தியிருப்பது, பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages