மார்ச் 26 ஆம் தேதி கூடிய புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டத்தில் துணை ஆளுநர் கிரண்பேடி உரையாற்றினார். இதனைத் தொடர்ந்து 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக, ஜூன் 4 ஆம் தேதி சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதாக பா.ஜ.க நியமன உறுப்பினர்கள் 3 பேர், இன்று சட்டப் பேரவைக்கு வந்திருந்தனர். அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், கறுப்புக்கொடியுடன் ஊர்வலம் நடத்த முயனறனர். இதனால் புதுச்சேரி சட்டப்பேரவை வளாகம் பரபரப்பாக காணப்பட்டது. இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.கவினர் கைது செய்யப்பட்டனர்.
முதலமைச்சர் நாராயணசாமி நடப்பு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை இன்று தாக்கல் செய்தார். மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் கூறி அ.தி.மு.க மற்றும் என்.ஆர். காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்புச் செய்தனர். இதனையடுத்து கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்ய அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment