முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியைப் போன்று பிரதமர் மோடியை கொலை செய்ய சதி நடைபெறுவதாக புனே காவல்துறை எச்சரித்துள்ளது. இந்த செய்தியை கடுமையாக விமர்சனம் செய்துள்ள காங்கிரஸ், மோடியின் செல்வாக்கு வீழ்ச்சி யடையும் போதெல்லாம் இதுபோன்ற கொலைச் சதி செய்தி பரப்பப்படுவதாக கூறியுள்ளது. குஜராத் முதலமைச்சராக மோடி இருந்த காலத்தில் இருந்தே இத்தகைய தந்திரங்களை பாஜக கையாண்டு வருவதாக கூறியுள்ள காங்கிரஸ், தற்போது வெளியாகியிருக்கும் செய்தியின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதனிடையே, நாக்பூரில் ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் பாணியில் கையை நெஞ்சுக்கு நேரே உயர்த்தி உறுதிமொழி எடுப்பது போன்று சித்தரிக்கப்பட்ட படம் சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை கடுமை யாகச் சாடியுள்ள பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்தா, இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் மலிவான தந்திரம் என்று கூறியுள்ளார். ஆனால் இதை ஆர்.எஸ்.எஸ் மறுத்துள்ளது.
No comments:
Post a Comment