உரிமைக்குப் போராடுவோர் மரம் வெட்டிகள் என்றால் நாங்களும், மரம் வெட்டிகளே!. தமிழிசைக்கு கொங்கு சீமையின் சார்பில் பொங்கலூர் இரா.மணிகண்டன் கடிதம் - Agnipuratchi

உரிமைக்குப் போராடுவோர் மரம் வெட்டிகள் என்றால் நாங்களும், மரம் வெட்டிகளே!. தமிழிசைக்கு கொங்கு சீமையின் சார்பில் பொங்கலூர் இரா.மணிகண்டன் கடிதம்

Share This

அன்பு சகோதரி தமிழிசைக்கு அன்போடு வணக்கம். நான் நலம்.
தங்கள் நலமறிய ஆவல்.தங்களை போன்ற சமுதாயத்துக்கும் சேர்த்து குரல் கொடுக்கும்,உழைக்கும் எங்கள் மருத்துவர் அய்யாவின் மானசீக தொண்டனான பொங்கலூர் இரா.மணிகண்டன் எழுதும் கடிதம்
மரம் வெட்டி என்பது ஒரு சாதியின் அடையாளமா?
இதுவும் ஒரு தீண்டாமை சொல் தானே?
இலக்கிய செல்வரின் மகளாகப் பிறந்து இழிவான சொல்லை பதிவு செய்து
அரசியல் செய்யும் அநாகரிகத்தை செய்யலாமா?
21 பேரை பலி கொடுத்து ஒடுக்கப்பட்ட,பிற்படுத்தப்பட்ட,மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களை கைதூக்கி விட்ட மக்கள் காவலர் மருத்துவர் அய்யாவை பற்றி எப்படி மரம் வெட்டி என்று சொல்ல மனம் வந்தது.பசுமை தாயகம் என்ற அமைப்பை நிறுவி பல இலட்சம் மரங்களை நட்டிய எங்களின் இயற்கை வேளாண் நாயகன் மருத்துவர் அய்யா அவர்களை பற்றி எந்த ஒரு அரசியல் தலைவரும் விமர்சிப்பதற்கே அறுகதையற்றவர்கள்.
108 சமூகங்கள் பயனடைய காரணமாக இருந்த 1987 இல் நடைபெற்ற இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் நியாயம் இல்லையெனில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் வன்னியர் உள்ளிட்ட சமூகங்களை அரசே சேர்த்து ஆணையிட்டது ஏன்?
போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள்,மாநாடுகள்,பேரணிகள்,கருத்தரங்கங்கள்,கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தல் என்று தொடர்ந்து ஜனநாயக முறையில் மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில்
பிற்படுத்தப்பட்ட -ஒடுக்கப்பட்ட மக்கள் அரசை வலியுறுத்திய போதும் கண்டு கொள்ளாமல் அவமானப்படுத்தியதை அடுத்து ஒரு எல்லை மீறிய பின்னர் ''ஒரு வாரம் சாலை மறியல்''என்று அறிவித்த பின்னரும் நியாயத்தை மதிக்காமல் போராடவே கூடாது என்றே எண்ணி சர்வாதிகாரத்துடன்''தன்சொந்த மக்களையே அம்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு சுட்டுக் கொன்றால்''யார் தான் வேடிக்கை பார்ப்பார்கள்.
வாழ்வதற்காகப் போராடினால் சாவதற்கு வழி செய்தால் எந்த ஒருவனுக்கும் எல்லை மீறிய கோபம் வரத்தான் செய்யும்.
அந்த வகையில் இருபத்தியொரு பேர் தங்களின் கண் முன்னால்படுகொலை செய்யப்பட்ட நிலையில் மானம்,வெட்கம்,ரோசம்
உள்ள எந்த ஒரு முடவனால் கூட அதை பொறுத்துக்கொள்ள முடியாது.
அப்படிப்பட்ட நிலையில் அன்று ஒரு நூறு மரங்களை வெட்டி போராட்டத்தை நடத்தி தங்களின் ஆற்றாமையை வெளிப்படுத்திக் கொண்ட வரலாறு இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தில் மட்டுமல்ல நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் 1970 முதல் 1984 வரை நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திலும் எதிரொலித்தது.
பாலங்கள் உடைக்கப்பட்டது,வாகனங்கள் கொளுத்தப்பட்டது,மரங்கள் வெட்டப்பட்டது,நாடே பற்றி எரிந்தது.எனது சொந்த ஊரான அன்றைய கோவை மாவட்டம் பொங்கலூர் அருகேயுள்ள தாயம்பாளையத்தில் பிரதான சாலையில்
ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை உடைத்து எரிந்து கொந்தளித்த விவசாயிகள்,இளைஞர்கள் என் தந்தை ராமசாமி கவுண்டர் உட்பட காவல்துறையின் அடக்கு முறைக்கு ஆளானதை நானே அறிவேன்.அறுபதுக்கும் மேற்பட்ட விவசாயிகள்,இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் அதை யார் என்ன சொன்னாலும் கவலையில்லை.
மருத்துவர் அய்யாவின் சமூக நீதிக்கான போராட்டமும்,நாராயணசாமி நாயுடுவின் உழவர் உரிமைக்கான போராட்டமும் வெவ்வேறானவை அல்ல. மருத்துவர் அய்யா தலைமையில் போராடியவர்களை மரம் வெட்டிகள்என்றால் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் போராடியவர்களும் மரம் வெட்டிகளே.
அப்படி மரம் வெட்டிகள் என்ற சொல் இழுக்கானது எனில் அந்த சொல்லை நாங்களும் மகிழ்ச்சியோடு சுமப்போம்.
ஏனென்றால் மரங்களை வெட்டி,வாகனங்களை எரித்து,பாலத்தை உடைத்து போராடினால் மட்டுமே நியாயத்தை வழங்குகிற அரசுகளே இங்கே இருக்கிற போது அப்படி செய்தால் தான் உரிமையை மீட்க முடியும் என்ற மக்களாட்சி இங்கே இருக்கிற போது எங்களை ''மரம் வெட்டிகள் '' என்று அழைப்பதை மகிழ்ச்சியோடு ஏற்கிறோம்.
பாஜக தமிழக தலைவர் தமிழிசை அவர்கள் மரம் வெட்டிகளான பாமகவை சென்ற நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணியில் சேர்க்க நரேந்திர மோடி கடுமையாக முயற்சி செய்த போது ஏன் எதிர்க்கவில்லை.அப்போது மரம் வெட்டிகளைப் பற்றிய உங்கள் மதிப்பீடு எப்படி இருந்தது.
அப்போது தேர்தல் வெற்றி இப்போது மரம் வெட்டியா?
அன்புமணி ராமதாஸ் அவர்கள் மருத்துவர் மட்டுமல்ல மக்கள் விரும்புகிற மாபெரும் தலைவர்.அவரை சாதியின் அடையாளம் என்று சொல்லும் நீங்கள் அந்த சாதியை சேர்ந்தவர்கள் பலரை தன்னோடு(பாஜகவில்)
சேர்த்துக் கொண்டது எதற்காக? சமூக நீதியை வென்றெடுக்கவா? சாதியை ஒழித்துசரித்திரம் படைக்கவா?
சாதியைப் பற்றி சொல்லி அன்புமணியை தனிமை படுத்த அதிமுக-திமுக இன்னுமுள்ள கட்சிகள் அனைத்தும் இன்றுவரையும் முயற்சி செய்தும் முடியாத நிலையில் முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்பட்ட கதையாய் ''நோட்டவையே வெல்ல முடியாத தமிழிசையின் பாஜக''
இருபத்து ஐந்து இலட்சம் வாக்குகளை பெற்று தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியின் இளம் தலைவர் அன்புமணியை பார்த்து சாதியின் அடையாளம் என்று சொல்ல வெட்கமாக இல்லையா?
கொங்கு சீமையில் பிறந்து வளர்ந்து வாழ்ந்து வருகிற என் போன்ற இளைஞர்கள் கொங்கு நாட்டின் தலைவர் கோவை செழியன் கைபிடித்து பொதுவாழ்வில் வளர்ந்தவர்களே என்றாலும் கொள்கைக் குன்றாக விளங்குகிற மருத்துவர் அய்யாவை மானசீகமாக ஏற்றுக் கொண்டு பாமகவில் பணியாற்றுவது எதனால் சாதியின் தலைவர் என்பதாலா?
சாதிக்க துடிக்கும் தலைவர் என்பதால் மட்டுமே?
எனவே எச்சரிக்கை செய்கிறேன்.
மக்கள் காவலர் மருத்துவர் அய்யா அவர்கள் சமூக நீதியின் தந்தை.ஒடுக்கப்பட்ட,உங்களைப்போன்ற எங்களை போன்ற அனைத்து பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக்காவலரே அவர் தான்.அத்தகைய மாமனிதரை மக்களின் போராளியை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று அன்போடு வேண்டுகிறேன்.
சகோதரி தமிழிசை தனது செயலுக்கு வருத்தமும்,மன்னிப்பும் கேட்க வேண்டும்.மாபெரும் சமுதாயங்களை மோதவிட்டு அரசியல் செய்வதைக் கைவிட வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

பொங்கலூர் மணிகண்டன் பாமக துணைத்தலைவர்

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages