டாக்டர் எம்.ஜி.ஆர் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறைச் சார்பாக "இப்தார் நோன்பு திறப்பு விழா"
சென்னை,மதுரவாயல் டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியல் துறைச் சார்பாக 'இப்தார் நோன்பு திறப்பு விழா' 6.6.2018, புதன் அன்று மாலை 6.30 மணிக்கு மேல் சிறப்பாக நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட அனைவரும் பழச்சாறு, பழவகைகள் மற்றும் கஞ்சி ஆகியவை சாப்பிட்ட பின்பு கை,கால்களைக் கழுவிக்கொண்டு முஸ்லீம் தோழர்கள் தொழுகை செய்து நிகழ்வினை சிறப்பாக முடித்தனர்.
விழாவில் Dr. MGR பல்கலைக்கழக தலைவர் Er.அருண்குமார், பதிவாளர் Dr. பழனிவேல், டீன் Dr.சிருள்ராஜ், துணை டீன் Dr.ரமேஷ், வணிகவியல் துறைத்தலைவர் Dr. செந்தில்குமார், வணிகவியல் துறை பேராசிரியர்கள் Dr.செந்தில்மதி, Dr.பொன்முத்துமாரி, பாத்திமா, சுகிதா, சாலினி, பிரித்திஹீ, மு.பவுன்குமார், PT மாஸ்டர் செந்தில்குமார், அலுவலக ஊழியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக 'ACS மருத்துவக் கல்லூரி & மருத்துவமனையின் இயக்குனர் Dr.சான்வாஸ் கான் அவர்களும், Dr. MGR பல்கலைக்கழக திட்ட அலுவலர் Dr.நெய்மூர் ரகுமான் அவர்களும் கலந்துகொண்டனர்.
Dr. சான்வாஸ்கான் அவர்கள் பேசுகையில், 'இந்துகள் ஓர் கடவுளையும், கிறித்தவர்கள் சிலுவை வடிவ கடவுளையும், முஸ்லீம்கள் ஓர் கடவுளையும் என வணங்குவது வேறுபட்டாலும் அனைவரும் ஒரே கடவுளை வெவ்வேறு முறைகளில் வணங்குகிறோம்' என்றார்.





No comments:
Post a Comment