தூத்துக்குடி - அமிலம் அகற்றும் பணி - Agnipuratchi

தூத்துக்குடி - அமிலம் அகற்றும் பணி

Share This

ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து கந்தக அமிலத்தை கொள்கலன் ஊர்திகளில் கோவைக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தூத்துக்குடியில் பொதுமக்களின் கடும் எதிர்ப்பால் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையில் நச்சுவாயு கசிவு ஏற்பட்டதால், அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் மாயக்கமடைந்தார். இதையடுத்து ஆய்வில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள், சல்பியூரிக் அமிலம் இருந்த கலன் வழியே நச்சு வாயு கசிவதை கண்டறிந்தனர். இதனால் அவற்றை பாதுகாப்பான முறையில் அகற்றும் பணி நேற்று தொடங்கியது. இவற்றை எடுத்துச் செல்ல 5 கொள்கலன் ஊர்திகள் நேற்று உள்ளே சென்றன. இந்த நிலையில் தலா 21 டன் கந்தக அமிலம் நிரப்பட்ட கொள்கலன் ஊர்திகள், ஒவ்வொன்றாக ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து புறப்பட்டுச் சென்றன. இந்த அமிலமானது ஸ்டெர்லைட் சார்பில் வழக்கமாக விற்கப்படும் கோவையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

அதேநேரத்தில் மின்சாரம் வழங்கவும், பணியாளர்களை அனுப்பவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் அனுமதிகோரி வருவதால், ஆலையை மீண்டும் இயக்க மறைமுகமாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ என்ற ஐயம் பொதுமக்களிடையே எழுந்துள்ளது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages