ஐயலலிதா கொள்ளையடித்த பணத்தை தினகரன் தரப்பினர் பங்கு போட்டுக் கொள்வதாக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். அப்போது ஜெயலலிதாவால் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை தினகரனும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் 18 பேரும் பங்குபோட்டுக் கொள்வதாக கூறினார்.
அமைச்சரின் பேச்சைக்கேட்டு மேடையில் இருந்த நிர்வாகிகளும், கூட்டத்தில் கலந்துகொண்டவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் நிலைமையை உணர்ந்து கொண்ட அமைச்சர் சீனிவாசன், பேச்சை வேறு விவகாரத்தில் திருப்பி சமாளித்தார். சர்ச்சைக்குரிய வகையில் பேசுவது திண்டுக்கல் சீனிவாசனுக்கு வாடிக்கை என்றாலும், ஜெயலலிதா கொள்ளையடித்தார் என தற்போது பேசியிருப்பது சர்ச்சையின் உச்சம் என்றால் அது மிகையன்று.
No comments:
Post a Comment