கர்நாடக எழுத்தாளர்கள் கவுரி லங்கேஷ் மற்றும் கல்புர்கி ஆகிய இருவரும் ஒரே துப்பாக்கியைக் கொண்டு கொலை செய்யப்பட்டனர் என்ற உண்மை கண்டறியப் பட்டுள்ளது. - Agnipuratchi

கர்நாடக எழுத்தாளர்கள் கவுரி லங்கேஷ் மற்றும் கல்புர்கி ஆகிய இருவரும் ஒரே துப்பாக்கியைக் கொண்டு கொலை செய்யப்பட்டனர் என்ற உண்மை கண்டறியப் பட்டுள்ளது.

Share This

கர்நாடகாவில் மதவெறியை கடுமையாகச் சாடிவந்த பகுத்தறிவு எழுத்தாளர் கல்பர்கி கடந்த 2015ஆம் ஆண்டு கொடூரமாக கொல்லப்பட்டார். இதேபோன்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளை விமர்சனம் செய்துவந்த பெண் எழுத்தாளர் கவுரி லங்கேஷூம் 2017ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்த குற்றச்செயல்களில் வலதுசாரி மதவெறி அமைப்புகளுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த இருவரையும் கொலை செய்ய ஒரே துப்பாக்கி பயன்படுத்தப்ப ட்டிருப்பதாக தடய அறிவியல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இருவரும் கொலை செய்யப்பட்டபோது கைப்பற்றப்பட்ட துப்பாக்கிக் குண்டுகள் மூலம் இந்த உண்மை தெரியவந்துள்ளது. துப்புத்துலக்குவதில் பெரிய முன்னேற்றம்  ஏற்பட்டிருப்பதாக காவல்துறை கூறியுள்ளது. விரைவில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages