கர்நாடகாவில் உள்ள கபினி அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணை யில் இருந்து 35 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் வெறியேற்றப்பட்டது. இந்நிலையில், அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக குறைந்ததால், காவிரியில் தண்ணீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. திறக்கப்பட்ட தண்ணீர் தமிழக எல்லைப் பகுதியான பிலிகுண்டுலுவையே இப்போதுதான் எட்டியுள்ளதால் குறுவை சாகுபடி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. திருப்பூரில் செய்தியா ளர்களிடம் பேசிய விவசாய சங்கங்கங்களின் கூட்டமைப்பு செயலாளர் நல்லசாமி, காவிரியில் திறக்கப்பட்டது தமிழகத்தின் உரிமை நீரா? உபரி நீரா என கேள்வி எழுப்பினார்.
பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிப்பதைபோல் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு வழங்கவேண்டிய தண்ணீரை நாள்தோறும் கொடுத்துவிடவேண்டும் என அவர் வலியுறுத்தினார். தமிழகத்திற்கான நீர் பங்கீடு குறித்து காவிரி மேலாண் மை ஆணையம் வௌ¢ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறு த்தினர்.
No comments:
Post a Comment