ஈரோடு - குவிலென்ஸ் பொருத்தும் பணி  - Agnipuratchi

ஈரோடு - குவிலென்ஸ் பொருத்தும் பணி 

Share This

சத்தியமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் விபத்துக்களை தவிர்க்க குவியாடி பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஈரோடு மாவட்டம் சத்யமங்கலத்தை அடுத்த திம்பம் மலைப்பாதையில் 27 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இந்த சாலையில் 24 மணிநேரமும் பேருந்து, சரக்குந்து போக்குவரத்து நடைபெற்று வருகிறது. வளைவுகளில் எதிரே வரும் ஊர்திகள் தெரியாததால், அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் விபத்துக்களை தடுக்கும் வகையில், ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில், முதற்கட்டமாக ஆபத்தான 20 கொண்டை ஊசி வளைவுகளில் குவியாடி பொறுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages