சேலம் பசுமைவழிச்சாலைக்கு நிலம் வழங்குவோருக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் என்பது தவறான பரப்புரை என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். - Agnipuratchi

சேலம் பசுமைவழிச்சாலைக்கு நிலம் வழங்குவோருக்கு கோடிக்கணக்கில் இழப்பீடு வழங்கப்படும் என்பது தவறான பரப்புரை என மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.

Share This

பா.ம.க.நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை-சேலம் பசுமைவழிச்சாலைக்கு நிலம் வழங்குவோருக்கு கோடிக்கணக்கில் இழப் பீடு வழங்கப்படும் என அரசுத் தரப்பில் தவறான பரப்புரை செய்யப்படுவதாக கூறி யுள்ளார். அப்பாவி மக்களை ஏமாற்றி அவர்களின் நிலங்களை பறிப்பதற்காக அரசே பொய்களை அவிழ்த்துவிடுவதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். எட்டு வழிச்சாலைக்கு நிலம் கொடுத்தால் கோடீஸ்வரர்களாகி விடலாம் என நடு வண் மற்றும் மாநில அரசுகள் ஆசை காட்ட தொடங்கி விட்டதாகவும் மருத்துவர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். அதிகாரிகள், ஆளுங்கட்சியினர் மூலம் மக்களை அணுகும் ஆட்சியாளர்கள், நிலத்துக்கு கோடிகளில் இழப்பீடு வழங்கப்படும் என்றும்,அது தேவையில்லை என்றால் செழிப்பான பகுதிகளில் நிலம் வழங் குவதாக ஆசை காட்டி மனதை கரைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறி யுள்ளார்.இந்த நிலையில் பசுமை வழிச்சாலைக்காக நிலங்களை கையகப்படுத்திய பின்னர் ஆட்சியாளர்களின் அணுகுமுறை எவ்வாறு மாறும் என்பதற்கான ஆதா ரங்கள் கிடைத்துள்ளன.இன்றைய நிலையில் சென்னையிலிருந்து சேலம் செல் வதற்கான முதன்மைச் சாலை உளுந்தூர்பேட்டை சாலைதான். இங்கு 4 வழிச் சாலை அமைப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கே இன்னும் இழப்பீடு வழங்கப்படவில்லை. உளுந்தூர்பேட்டை முதல் சேலம் வரை 136 கிலோ மீட்டர் தொலைவுக்கு  தேசிய நெடுஞ்சாலை அமைப் பதற்காக 19 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன.10 ஆயி ரத்துக்கும் மேற்பட்ட வீடுகள், திருமணஅரங்குகள், கோவில்கள் தரைமட்டமாக் கப்பட்டன. 

கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு 25 லட்சம் ரூபாய், கிணறுக்கு 10 லட்சம் ரூபாய், தென்னை ஒன்று 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என வாக்கு றுதி அளிக்கப்பட்டது. இருந்தும் நிலம் கொடுக்க பெரும்பாலான விவசாயிகள் தய ங்கிய நிலையில் அவர்களை சந்தித்துப் பேசிய அதிகாரிகள், ஏராளமான சலுகை கள் வழங்கப்படும் என ஆசை காட்டினார்கள். அதை உண்மை என நம்பி ஏராள மான விவசாயிகள் நிலம் வழங்கினார்கள். நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் அவர்களுக்கு மிகக்குறைந்த தொகையே இழப்பீடாக அளிக்கப்பட்டது. நியாய மான இழப்பீடு கோரியவர்கள் ஆட்சியாளர்களால் மிரட்டப்பட்டார்கள். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழபபீடு வழங்குமாறு உயர்நீதிமன்றம் 2013 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. 5 ஆண்டுகளா கியும் உயர்நீதிமன்றத் தீர்ப்பு நிறைவேற்றப்படவில்லை. சென்னை- சேலம் பசுமை வழிச்சாலைக்கு நிலம் கொடுப்பவர்களுக்கு 9 கோடி ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என சேலம் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். இது மக்களை ஏமாற்றும் வேலை என்பதால், எந்தெந்த நிலங்களுக்கு எவ்வளவு இழப்பீடு வழங் கப்படும் என்ற விவரங்களை வெளியிடுமாறு முதலமைச்சர் பழனிச்சாமிக்கும், சேலம் மாவட்ட ஆட்சியருக்கும் சவால் விடுத்திருந்தேன். இருதரப்பில் இருந்தும் எந்தப் பதி லும் வரவில்லை. இந்தச்சூழலில் பசுமை வழிச்சாலைக்கு நிலம் கொடுப்பவர்க ளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தர வாதமும் இல்லை. உளுந்தூர் பேட்டை-சேலம் சாலைக்கு நிலம் கொடுத்த வர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் ஏமாற்றப்பட்டதைப் போல இவர்களும் ஏமாற்றப்படுவதற்கு வாய்ப் புகள் உள்ளன. நிலம் கையகப்படுத்தும் விவகாரத்தில் இழந்த நம்பிக்கையை அரசு மீண்டும் பெற வேண்டுமானால் உளுந்தூர்பேட்டை-சேலம் சாலைக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டை நடுவண் மற்றும் மாநில அரசுகள் உடனடியாக வழங்க வேண்டும். சென்னை- சேலம் பசுமைவழிச் சாலை சுற்றுச்சூழலுக்கும், வேளாண்மை உற்பத்திக்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பசுமை வழிச்சாலை திட்டத்தை கைவிடுவதாக நடுவண் மற்றும் மாநில அரசு அறிவிக்க வேண்டும் என மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages