எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு நிலம் அளவிடுவதை எதிர்த்து வயல்வெளியில் குடும்ப அட்டையை வீசி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   - Agnipuratchi

எட்டு வழிச்சாலைத் திட்டத்துக்கு நிலம் அளவிடுவதை எதிர்த்து வயல்வெளியில் குடும்ப அட்டையை வீசி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

Share This

சேலம் சென்னை இடையே 8 வழிச் சாலைத் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. காவல்துறையை கொண்டு நிலங்கள் அளவிடப்படுவது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாய அமைப்புகளை சேர்ந்தவர்கள்  போராட்டம் நடத்தினர்.  

இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சி.நம்மியந்தல் கிராமத்தில் நிலம் கையகப்படுத்தும் பணி இன்று நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள், தங்களுக்கு எந்த அரசு சலுகையும் வேண்டாம் என கூறி ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அட்டைகளை நிலத்தில் வீசி எறிந்தனர். 

இதனிடையே 8 வழிச்சாலை திட்டத்தால் சுற்றுச்சூழலும் விவசாயமும் பாதிக்கப்படு¢மஎன கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுது. சுற்றுச்சூழல் ஆய்வு நடத்த குழு அமைக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரிக்கை விடுத்தார். 8 வழிச்சாலை தொடர்பான பிற வழக்குகளுடன் இந்த வழக்கு சேர்த்து விசாரிக்கப்படும் என கூறிய உயர்நீதிமன்றம தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என ஆணையிட்டனர். 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages