பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சமையல் எரிவாயு விலையும் அதிரடியாக உயர்த் தப்பட்டுள்ளது. - Agnipuratchi

பெட்ரோல், டீசலைத் தொடர்ந்து சமையல் எரிவாயு விலையும் அதிரடியாக உயர்த் தப்பட்டுள்ளது.

Share This

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரத் தொடங்கியது. தொடர்ந்து 16 நாட்களாக விலை அதிகரிக்கப்பட்டதால் பெட்ரோல் விலை 81 ரூபாயையும், டீசல் விலை 70 ரூபாயையும் எட்டியுள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் இந்த நடவடிக்கைக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் எழுந்துள்ளது. 

இந்நிலையில் சமையல் எரிவாயு உருளையின் விலையும் இன்று அதிகரிக்கப்பட்டு ள்ளது. இன்று ஒரே நாளில் 2 ரூபாய் 34 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளன. இந்த புதி ய விலை உயர்வால் சென்னையில் 479 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சமையல் எரிவாயு உருளை, 481 ரூபாய் 84 காசுகளாக உயர்ந்துள்ளது. இதே போல் வணிக நிறுவனங்கள் பயன்படுத்தும் மானியமல்லாத எரிவாயு உருளையின் விலையில் 48 ரூபாய் அதிகரிக்கப்பட்டுள்ளது. அன்றாடத்தேவை களுக்குப் பயன்படும் எரிவாயு உருளையின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் இடையே அதிருப்தி அதிகரித்துள்ளது. இதனால் உணவகங்களில் பொருட்களின் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages