மாணவர்களின் பெற்றோரிடம் 2 லட்சம் ரூபாய் முன்வைப்புத் தொகை கேட்ட விவகாரத்தில் சென்னை எஸ்.எஸ்.எம். பள்ளி தாளாளர் சந்தானத்தை போலீசார் கைது⛓ செய்தனர். குரோம்பேட்டை, பெருங்களத்தூர் ஆகிய பகுதிகளில் செயல்படும் ஸ்ரீமதி சுந்தரவள்ளி நினைவு சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தாளாளராக இருப்பவர் சந்தானம். இவர், மாணவர்களின் பெற்றோரிடம் அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணம் என்று கூறி 2 லட்சம் ரூபாய் முன் வைப்புத் தொகை கேட்டதால், பெற்றோர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்ததோடு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் முறையிட்டனர். இதனை தொடர்ந்து இன்று காலை பணம் கட்ட கையாலாகதவர்கள் என மாணவர்களின் பெற்றோரை சந்தானம் பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து இன்று காலை அப்பள்ளியை பெற்றோர் மீண்டும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதோடு, பள்ளி நிர்வாகத்துடன் மோதலும் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்திற்குள் போலீசார் சென்றுள்ளனர். ஆனால் போலீசார் வந்ததை அறிந்த தாளாளர் சந்தானம் பள்ளியின் பின் பக்கம் வழியாக காரில் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதை அடுத்து காரில் அவரை துரத்திய போலீசார், நெடுங்குன்றம் அருகே கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
10500 மாணவர்களுக்கு தலா ரூ.2லட்சம் டெபாசிட் தொகை-பள்ளி தாளாளர் கைது
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment