இந்தியா-உகாண்டா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது - Agnipuratchi

இந்தியா-உகாண்டா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது

Share This

பிரதமர் மோடி முன்னதாக ருவாண்டா நாட்டில் கடந்த 2 நாட்களாக சுற்றுப்பயணம் செய்தார். ருவாண்டா பயணத்தை நிறைவு செய்த மோடி நேற்று மாலை உகாண்டா சென்றடைந்தார். அங்கு மத்திய பகுதியில் உள்ள கடற்கரை நகரமான எண்டபே விமான நிலையத்தில் மோடிக்கு முப்படையினர் அணிவகுப்புடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உகாண்டா அதிபர் பிரதமர் மோடியை வரவேற்றார். அரசு விருந்தினர் மாளிகையில் மோடிக்கு யோவேரி முஷேனி விருந்தளித்தையடுத்து, மோடி நாடாளுமன்றத்தில் சிறப்புரையாற்றினார். இருநாட்டு தலைவர்கள் முன்னிலையில் இந்தியா - உகாண்டா இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனை தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோகன்னர்ஸ்பர்க்கிற்கு மோடி செல்கிறார். அங்கு இன்று நடைபெறும் பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages