நாட்டில் கனிமவளம் மிக்க 12 பகுதிகளை வரும் இரண்டு மாதங்களில் ஏலம் விட அரசு முடிவுசெய்துள்ளது. கனிம வளங்கள் குறித்த மத்திய அரசின் ஆவணங்களில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜார்கண்டில் உள்ள கிராபைட் வளம் நிறைந்த மூன்று பகுதிகள், ஆந்திராவில் உள்ள சுண்ணாம்புக்கல் வளம் கொண்ட ஒரு பகுதி, கர்நாடகாவில் இரும்பு தாது கிடைக்கும் எட்டு பகுதிகள் ஆகியவை இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் சுண்ணாம்புக்கல் மற்றும் கிராபைட் பகுதிகள் ஆகஸ்ட் மாதத்திலும், இரும்பு தாது கிடைக்கும் பகுதிகள் அனைத்தும் செப்டம்பர் மாதத்திலும் அடுத்ததடுத்து ஏலம் விடப்படவுள்ளன. இதற்காக டெண்டர் கோரும் அழைப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டன. ஏல நடவடிக்கைகளின் போதே சுற்று சூழல் அனுமதி உள்ளிட்ட நடைமுறைகள் முடிவெடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
கனிம வளம் மிக்க 12 பகுதிகள்-ஏலம் விட மத்திய அரசு முடிவு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment