கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது என்றும் நேரில் சென்று பார்த்ததாகவும் முதல் அமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் பற்றி விசாரிக்க முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் காவேரி மருத்துவமனைக்கு வருகை அளித்து, கருணாநிதியை நேரில் சென்று பார்த்தனர். பின்னர் ⌚20 நிமிடங்கள் கழித்து முதல் அமைச்சர் உட்பட அமைச்சர்கள் வெளியில் வந்தனர். மருத்துவமனை வளாகத்தில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் அமைச்சர் பழனிசாமி, திமுக தலைவர் கருணாநிதியை துணை முதல்வரும் தானும் நேரில் சென்று பார்த்ததாகவும், கருணாநிதியின் உடல் நிலை சீராக உள்ளது எனவும் தெரிவித்தார். திமுக தலைவர் கருணாநிதியை, மு.க ஸ்டாலின், கனிமொழி ஆகியோருடன் சென்று பார்த்ததாகவும் அவர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி உடல்நலம் குறித்து முதல்வர் பேட்டி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment