கைலாஷ் யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களில் 158 பேர் மீட்பு - Agnipuratchi

கைலாஷ் யாத்திரை சென்று வெள்ளத்தில் சிக்கிய இந்தியர்களில் 158 பேர் மீட்பு

Share This

கைலாஷ் யாத்திரைக்காக நேபாளத்துக்குச் சென்று கனமழையால் நடுவழியில் சிக்கித் தவித்தவர்களில் இன்று 158 பேர் மீட்க்கப்பட்டுள்ளனர். நேபாளத்தில் பெய்த கனமழையால் அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதால், சாலைகள் துண்டிப்பு ஆகிய காரணங்களால், கைலாஷுக்கும் செல்ல முடியாமல், ஊருக்கும் திரும்ப முடியாமல் தவித்தனர். இதனால், ஆயிரத்து 500 பேரையும் பத்திரமாக மீட்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, நேபாள அரசுக்கு, இந்திய வெளியுறவுத்துறை வலியுறுத்தியது. இதையடுத்து, ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் சிமிகோட் பகுதியில் இருந்த 104 பேர் மீட்கப்பட்டு, நேபாள்கஞ்ச் பகுதிக்கு கொண்டுவரப்பட்டனர். 
மேலும், 5 சிறிய ரக விமானங்கள் அங்கு சென்றபோதும், மோசமான வானிலை காரணமாக அவைகள் இயக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனிடையே, சிமிகோட் பகுதியில் இருந்து மேலும் 158 பேர் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages