ராயப்பேட்டையில் காவலர் ராஜவேலுவை வெட்டிய ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. சென்னை ராயப்பேட்டை பி.எம்.தர்கா குடிசைப் பகுதியில் ஒரு கும்பல் தகராறில் ஈடுபடுவதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் வந்தது. இதனையடுத்து அந்த பகுதிக்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீஸ்காரர் ராஜவேலு உடனடியாக அங்கு விரைந்து சென்றார். அங்கு சில இளைஞர்கள் கும்பலாக சேர்ந்து மது அருந்தி ரகளையில் ஈடுபட்டிருந்தவர்களை அவர் எச்சரித்துள்ளார். குடி போதையில் அவர்கள் ராஜவேலுவை தொடர்ந்து தாக்க ஆரம்பிக்க, அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஆனந்தன் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி கொன்றான்.
இதில் அவரது தலையில் 16 இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டது. தற்போது அவர் மருத்துவமனையில் தீவிரமாக சிகிச்சை பெற்று வருகிறார். அந்த ரவுடி கும்பலை சேர்ந்த 6 பேரை போலீசார் ⛓கைது செய்துள்ளனர். இந்நிலையில், ரவுடி ஆனந்தன் தப்பிச்சென்றதாகவும், அவரை பிடிக்கும் முயற்சியில் அவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment