2 மாதங்களுக்குள் லோக் ஆயுக்தா சட்டத்தை முழுமையாக செயல்படுத்த உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவு. - Agnipuratchi

2 மாதங்களுக்குள் லோக் ஆயுக்தா சட்டத்தை முழுமையாக செயல்படுத்த உச்சநீதிமன்றத்திற்கு உத்தரவு.

Share This

நாடாளுமன்றத்தில் கடந்த 2013-ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு, 2014-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. நாடு முழுவதும் 15 மாநிலங்களில் இதுவரை லோக் ஆயுக்தா சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்த சட்டம் அமல்படுத்த தாமதமான நிலையில், திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் குருநாதன் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும், உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். அதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்த சட்ட மசோதா நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து இன்று உச்சநீதிமன்றத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை நிறைவேற்றி உள்ளதாக தமிழக அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இதனை ஏற்று கொண்ட உச்சநீதிமன்றம், லோக் ஆயுக்தா சட்டத்தை 2 மாதங்களில் முழுமையாக நடைமுறை படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages