தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்த நீண்ட போராட்டம் 100 வது நாளான மே 22ம் தேதி ஆட்சியர் அலுவலக முற்றுக்கை போராட்டத்தின் போது வன்முறையாக வெடித்தது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டது. ஆலையை மூடுவதற்கு கடந்த 28ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆலையினை மூடப்பட்டதால் 3000 ஒப்பந்த பணியாளர்கள் 1900 நிரந்த ஊழியர்கள் மற்றும் மறைமுக வேலை செய்துவந்தவர்கள் என ஆயிரக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர். மேலும், ஸ்டெர்லைட் ஆலைக்கு கனிமங்களை எடுத்துச் சென்ற லாரிகள், வேலையிழந்துள்ளதால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கக் கோரி, தூத்துக்குடியை சுற்றியுள்ள 3 கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். மக்களின் இந்த செயலால் பெரும் குழப்பம் நிலவி வருகிறது.
ஸ்டர்லைட் ஆலையினை மீண்டும் திறக்க கிராம மக்கள் மனு
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment