சென்னை உயர்நீதிமன்றம் எதிரே உள்ள என்.எஸ்.சி., போஸ் சாலையில் நடைபாதையை ஆக்கிரமித்துள்ள கடைகளை அகற்ற ஏற்கெனவே பல முறை உத்தரவிடப்பட்டும் அகற்றப்படாததை சுட்டிக்காட்டி டிராபிக் ராமசாமி பொதுநல வழக்கினை தொடர்ந்திருந்தார். இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் பிற்பகலில் ஆஜரான சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயனிடம், நடைபாதை வியாபாரிகளின் ஒழுங்குமுறை இந்த திட்டத்தினை செயல்படுத்த இது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடைபாதை வியாபாரிகளை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறிய பதில் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் இரண்டு ஆண்டுகளாக இதையே கூறுவதாகவும், மனுவுக்கு ஜூலை 20ல் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.
Home
அண்மை செய்திகள்
நடைபாதை ஆக்கிரமிப்பு விவகாரம்-சென்னை மாநகராட்சிக்கு ஜூலை 20ல் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
நடைபாதை ஆக்கிரமிப்பு விவகாரம்-சென்னை மாநகராட்சிக்கு ஜூலை 20ல் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு.
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment