கூடங்குளம் அணுஉலைக்கு தடை விதிக்க முடியாது-உச்சநீதிமன்றம் - Agnipuratchi

கூடங்குளம் அணுஉலைக்கு தடை விதிக்க முடியாது-உச்சநீதிமன்றம்

Share This

கூடங்குளம் அணு உலை செயல்பாட்டிற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. அணுக்கழிவுகள் சேமிப்பு கிடங்கு அமைக்கப்படாததால் அணுஉலை செயல்பாட்டை நிறுத்த உத்தரவிடக்⚖ கோரி தொடரப்பட்ட வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அணுக்கழிவுகள் சேமிப்பு கிடங்கை உருவாக்க மத்திய அரசுக்கு 2022 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உத்தரவிட்டது. மேலும், கிடங்குகள் அமைக்கும் வரை அணுஉலை செயல்பாட்டை நிறுத்தி வைக்கும் கோரிக்கையை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages