2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார். - Agnipuratchi

2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Share This

2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

100க்கும் கீழ்

கோல்கட்டாவில் நடந்த பேரணி ஒன்றில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், ஆகஸ்ட் 15 ம் தேதி முதல் பா.ஜ.,வுக்கு எதிராக பிரசார இயக்கம் துவங்கப்பட உள்ளது. 2019 லோக்சபா தேர்தல் பா.ஜ.,வுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். அக்கட்சி 100க்கும் குறைவான தொகுதிகளிலேயே வெற்றி பெறும். இதற்கான வழியை மேற்கு வங்கம் காட்டும். பந்தல் கட்ட தெரியாதவர்கள், நாட்டை கட்டமைக்க போவதாக கூறுகின்றனர்.

நாடு முழுதும் பல இடங்களில் சந்தேகத்தின் பேரில் அப்பாவிகள் அடித்து கொல்லப்படும் சம்பவங்கள் நடக்கின்றன. பா.ஜ., ஆர்எஸ்எஸ்சில் பல நல்ல தலைவர்கள் உள்ளனர். அவர்களை நான் மதிக்கிறேன். ஆனால், சிலர் எதிர்மறையான அரசியல் செய்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பேரணியில் முன்னாள் பா.ஜ., எம்.பி.,சந்தன் மித்ரா மற்றும் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மூத்த தலைவர்கள் சிலர் திரிணாமுல் காங்கிரசில் இணைந்தனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages