புதுக்கோட்டை அருகில் அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்டதில், தமிழக ஆளுநர் புரோகித் பன்வாரிலால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். புதுக்கோட்டை, திருச்சி ஆகிய இடங்களில் நடக்கும் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொள்வதற்காக 🏛தமிழக ஆளுநர் புரோகித் பன்வாரிலால் நேற்று காலை திருச்சி சென்றிருந்தார். அப்போது, புதுக்கோட்டையில், ஆய்வு பணிகளை முடித்து விட்டு நேற்று மாலை 4.40 மணிக்கு தனது காரில் சென்று கொண்டிருந்தார். அந்த நேரத்தில், புதுக்கோட்டை நோக்கி வந்த அரசுப் பேருந்து ஒன்று ஆளுநரின் கார் மீது மோதியது. இதில், ஆளுநர் சென்ற காரின் வலது பக்க கண்ணாடியில் பேருந்து உரசியதோடு, பக்கவாட்டில் இருந்த கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது. இந்த விபத்தில், ஆளுநர் மற்றும் அவரது டிரைவர் ஆகியோர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். இதனையடுத்து இராணுவ காவல் படையினரின் காரில் ஆளுநரை திருச்சிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்தை ஏற்படுத்திய அரசுப் பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழக ஆளுநர் புரோகித் பன்வாரிலால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment