தொழிலதிபர் விஜய் மல்லையாவின் சொகுசு விமானம் ரூ.35 கோடிக்கு ஏலத்தில் விடப்பட்டுள்ளது. விஜய் மல்லையா வங்கிகளில் ரூ.9,000 கோடி கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல் லண்டனிற்கு தப்பி சென்றுவிட்டார். அவரிடமிருந்து, கடன் தொகையை மீட்க வங்கிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து நீதிமன்றத்தில் பல வழக்குகளை தொடர்ந்தன. அவரை இந்தியாவிற்கு அழைத்து வர முயன்றும் முடியாதகாரணத்தினால், அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டது. இந்நிலையில், விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ஏ319 ஜெட் சொகுசு விமானத்தை சேவை வரித்துறையினர் கடந்த 2016ம் ஆண்டு மார்ச் மாதம் பறிமுதல் செய்தனர். அதிலிருந்து 4 முறை ஏலம் கோரப்பட்டது. ஆனால் விமானத்தை ஏலத்தில் எடுப்பதற்கு யாரும் முன்வராத காரணத்தினால் விமானத்தை விற்க முடியாமல் வரித்துறையினர் தவித்தனர். இந்நிலையில், மீண்டும் விமானத்தை மின்னணு முறையில் ஏலம் கோரினர். இதனையடுத்து, அமெரிக்காவை சேர்ந்த விமான நிறுவனத்தினர் ரூ.34.8 கோடிக்கு விஜய் மல்லையாவின் விமானத்தை ஏலத்தில் எடுத்துள்ளனர். முன்னதாக, சொகுசு விமானத்துக்கு அடிப்படை ஏலத்தொகையாக ரூ.152 கோடி நிர்ணயிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.35 கோடிக்கு ஏலம் விடப்பட்ட விஜய் மல்லையாவின் சொகுசு 🛩 விமானம்
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment