மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 70 சதவீதம் எம்பிபிஎஸ் இடங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர் - Agnipuratchi

மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்களுக்கு 70 சதவீதம் எம்பிபிஎஸ் இடங்கள் அமைச்சர் விஜயபாஸ்கர்

Share This

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவ படிப்புகளுக்கு பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. பொதுப்பிரிவினருக்கு நடக்கும் கலந்தாய்வின் முதல்நாளான இன்று 598 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து சென்னை ஓமாந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளா்களிடம் பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளதாவது, மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 படித்தவா்களுக்கு 70 சதவீதம் எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்கும். அதே போல சிபிஎஸ்இ பள்ளியில் படித்தவா்களுக்கு 30 சதவீத மருத்துவ படிப்பிற்கான இடங்கள் கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர் அரசு ஒதுக்கீட்டின் கீழ் 3501 'எம்.பி.பி.எஸ்.' இடங்கள் உள்ளது என்றும், வேலூர் சிஎம்சி-யை பொறுத்த வரை நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் இடங்கள் வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages