முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 3ம் ஆண்டு நினைவு தினம் - Agnipuratchi

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 3ம் ஆண்டு நினைவு தினம்

Share This

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாமின் 3ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. ராமேஸ்வரம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜெயினாலுபுதீன் - ஆஷியம்மாளுக்கு 7வது மகனாக பிறந்தவர். ராமேஸ்வரத்தில் ஆரம்ப கல்வியும், திருச்சி, ராமநாதபுரம் போன்ற இடங்களில் மேற்படிப்பையும் முடித்த அவர், சென்னை எம்.ஐ.டியில் ✈விமான தொழில்நுட்ப கல்வியை முடித்தார். தனது கடுமையான உழைப்பால் ஆராய்ச்சிப் பணிகளில் பல சாதனைகளை புரிந்தார். அக்னி ஏவுகனை சோதனைக்குப் பின் உலகம் முழுவதும் அறியப்பட்டார். இவருடைய சாதனைகளால் பத்ம பூஷன், பத்ம விபூஷன் என விருதுகள் அவரை தேடி வந்தன. இந்த சாதனைகளை தொடர்ந்து அப்துல் கலாம் 2002ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி நாட்டின் 11வது ஜனாதிபதியாக பதவியேற்றார். தனது பணி முடியும் வரை மக்களின் ஜனாதிபதி என பெயர்பெற்றவர். இவர்களுக்கு குழந்தை என்றால் மிகவும் விருப்பம். 2015ம் ஆண்டு , இதே நாளில் ’அருமை மாணவர்களே’ என்ற இறுதிச் சொற்களுடன் அவரின் உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு சாதி, மத, இன, பேதமின்றி இந்தியர்கள் அனைவரும் அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages