திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறார்-மு.க.ஸ்டாலின் - Agnipuratchi

திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் தேறி வருகிறார்-மு.க.ஸ்டாலின்

Share This

தி.மு.க. தலைவர் கருணாநிதி விரைவில் உடல் நலம் பெற்று அனைவருக்கும் நன்றி தெரிவிப்பார் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரித்த குடியரசுத் தலைவருக்கும், பிரதமருக்கும் தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்வதாகக் கூறியுள்ளார். மேலும், தி.மு.க. தலைவருக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் விரைவில் குணமடைந்து அனைவருக்கும் நன்றி தெரிவிப்பார் என நம்புவதாகவும் கூறியுள்ளார். தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நலம் விசாரித்த ராகுல்காந்தி, சீதாரம் எச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறியுள்ள மு.க.ஸ்டாலின் அனைவரின் அக்கறையும் வாழ்த்துக்களும் தி.மு.க. தலைவர் கருணாநிதியை விரைவில் உடல் நலம் மீண்டு வரச் செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages