நடத்துநர் இல்லாமல், ஓட்டுநரை மட்டும் கொண்டு இயங்கும் பேருந்துகளைத் தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. இதை எதிர்த்து தமிழ்நாடு போக்குவரத்துத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இது குறித்த விசாரணையில் தமிழக அரசு சார்பில், நடத்துநர் இல்லாமல் ஓட்டுநரைக் கொண்டு பேருந்தை இயக்குவதில் எந்தத் தவறும் இல்லை என்றும் ஒருவேளை பேருந்தை நிறுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், பேருந்தில் உள்ள மணியைப் பயணிகள் பயன்படுத்தலாம் என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, மோட்டார் வாகனச் சட்டத்தில், ஒருவரே ஓட்டுநராகவும், நடத்துநராகவும் இருக்க எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவித்தார். இது அரசின் கொள்கை முடிவு என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட எந்தத் தேவையும் இல்லை எனக் கூறி, மனுவைத் தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடத்துநர் இல்லா பேருந்துகளுக்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி
Share This
Tags
# அண்மை செய்திகள்
Share This
About agnipuratchi@gmail
அண்மை செய்திகள்
Labels:
அண்மை செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
Post Bottom Ad
fnasfkasjfkas
Author Details
அக்னி புரட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள்.
No comments:
Post a Comment