மணல் குவாரிகளால் காவேரி, கொள்ளிடம் ஆறுகளில் பாதிப்பு - Agnipuratchi

மணல் குவாரிகளால் காவேரி, கொள்ளிடம் ஆறுகளில் பாதிப்பு

Share This

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த சச்சிதானந்தம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், கொள்ளிடம் ஆற்றில் விளாங்குடியில் அரசு மணல் குவாரியால் அதிகப்படியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றின் புதிய இடத்தில் மணல் அள்ள தடையில்லா சான்று அளிக்கப்பட்டுள்ளது. இது விவசாயத்தைப் பெரிதும் பாதிக்கும். எனவே மணல் குவாரிக்கு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும். மேலும் குவாரி இயங்க தடையும் விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து மனு தாக்கல் செய்திருந்தார். இதே போல் காவேரி ஆற்று படுகையிலும் மணல் குவாரிகளால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று புகார் எழுந்துள்ளது. இது குறித்து மனுக்கள் இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு கண்காணிப்புக்குழு அமைத்து, மணல் குவாரி பிரச்சனைகள் ஆய்வு செய்யப்படும் என்றும், ஆய்வு செய்த பின்னர், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages