மாற்றுத்திறனாளிகளுக்கான உணவு மானியம் உயர்வு-தமிழக அரசு - Agnipuratchi

மாற்றுத்திறனாளிகளுக்கான உணவு மானியம் உயர்வு-தமிழக அரசு

Share This

மறுவாழ்வு இல்லத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான உணவு மானியத்தை, ரூ.900 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா 2012-2013-ம் ஆண்டில், 10 அரசு மறுவாழ்வு மற்றும் அரசு ஏழைகள் பராமரிப்பு இல்லத்தில் தங்கியுள்ள இல்லவாசிகளுக்கு, தரமான மற்றும் சத்தான உணவை வழங்குவதற்கு ஏதுவாக நாள் ஒன்றுக்கு 15 ரூபாய் என்ற வீதம் மாதமொன்றுக்கு ரூ.650 என உயர்த்தி ஆணையிட்டார். இதன்மூலம், ஆண்டுக்கு 8 கோடியே 22 லட்ச ரூபாய் மதிப்பில் மாதம் ஒன்றுக்கு 650 ரூபாய் உணவூட்டு மானியம் பெற்று பயனடைந்து வருகிறார்கள். இந்தநிலையில், சிறப்புப் பள்ளிகள் மற்றும் இல்லங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் சத்தான உணவை வழங்கும் பொருட்டு, தற்போது வழங்கப்பட்டு வரும் 650 ரூபாய் மாத உணவூட்டு மானியத்தை, ரூ.900 ஆக உயர்த்தி வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். உணவூட்டுச் செலவினம் உயர்த்தி வழங்கப்படுவதால் அரசுக்கு ஆண்டொன்றுக்கு மொத்தம் 11 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages