கருணாநிதியை சந்திக்க வந்துள்ளார் தமிழக ஆளுநர் - Agnipuratchi

கருணாநிதியை சந்திக்க வந்துள்ளார் தமிழக ஆளுநர்

Share This

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நள்ளிரவில் மிகவும் மோசமானதால் அவர் ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், கருணாநிதியை நலம் விசாரிப்பதற்காக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் காவேரி மருத்துவமனைக்கு வந்துள்ளார். முக.ஸ்டாலினிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் விசாரித்தார். மருத்துவமனையில் ஸ்டாலின், கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages