மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது.  - Agnipuratchi

மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்கியது. 

Share This

மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளி யிடப்பட்ட நிலையில், கலந்தாய்வு இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் முதற் கட்டமாக சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். நீட் தேர்வு அடிப்படையில் மொத்தம் 141 இடங்களுக்கு இன்று கலந்தாய்வு நடைபெற்றது.

அதேநேரத்தில் கலந்தாய்வு பெயர் பட்டியலில் குளறுபடி இருப்பதாக குற்றம் சாட்டிய மாணவி ஒருவர், மாற்றுத்திறனாளி பட்டியலில் இருந்து தனது பெயர் நீக்கப்பட்டுள்ளதாக புகார் கூறினார்.

இதேப்போன்று பொதுப்பிரிவு மாணவர்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு நாளை தொடங்கி 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

No comments:

Post a Comment

Post Bottom Ad

fnasfkasjfkas

Pages